நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய கட்சி நிர்வாகி காளியம்மாள், பேருந்தில் பயணச் சீட்டு எடுக்க முடியாத சூழ்நிலையில் இருப்பவர்களெல்லாம் ஆதி தமிழர் குடிமக்களாக தான் இருக்க முடியும் என்று நிர்பந்திகிறீர்களா எங்களை ? இல்லை சாதியை கூறி இவர்கள் வறுமை கோட்டிற்கு கீழ் தான் இருக்க வேண்டும் என்று கட்டளை இடுகிறீர்களா? என்ன சொல்ல வருகிறீர்கள்.
இதற்கெல்லாம் கேள்வி கேட்பதற்கு இங்கே நாதி இல்லை, நாதியற்ற குடிகளாக நாம் மாறிப் போனோம். கேரளாவில் இருக்கக்கூடிய அமைச்சர் சொல்லுகின்றார்… உங்கள் மாநிலத்தை கட்டப்பட வேண்டிய விழிஞம் துறைமுகத்திற்கு, அதானின் உடைய துறைமுகத்திற்கு, அங்கே இருக்கக்கூடிய மலைகளை உடைத்து கல்லை கொடுக்க வேண்டியதானே ? எதற்கு தமிழ்நாட்டில் 14 கல்குவாரிகள் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்று கேட்டால்..
அவர் என்ன சொல்கிறார் என்றால்? கேரளாவில் இருப்பதெல்லாம் இயற்கையினுடைய கொடை, எங்களுடைய சொந்த பூமி. அந்த மலைகளை உடைக்க முடியாது. ஏன் இளிச்சவாயன் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார், யாரும் போராட மாட்டார்கள். அங்கு இருக்கிறது மலை, காசு கொடுத்து, கமிஷன் கொடுத்தால் மலைகளை உடைப்பதற்கு அனுமதியை கொடுத்து விடுவார்கள், அங்கு போய் உடைத்துக் கொண்டு வந்து கொட்டுங்கள் என்கிறார்கள்.
இவர்களுடைய பார்வை என்னவாக இருக்கிறது என்று அருமை தமிழ் சமூகத்திற்கு நான் கேள்வியாக வைத்து விட்டு செல்கிறேன். என்ன வைத்துவிட்டு போகப் போகிறீர்கள், மலைகள் இல்லை, மணல் இல்ல, கடல் இல்லை , விவசாய நிலங்கள் இல்லை, மீண்டும் ஓஎன்ஜிசி மீத்தேன் எடுக்கின்ற திட்டத்தை கொண்டு வந்து விட்டார்கள், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவிக்கப்பட்ட எல்லா மாவட்டங்களிலும் மீண்டும் வரக்கூடாத… அழிவுகரமான தொழிற்சாலைகளை கொண்டு வந்து வேலைகளை துவங்க இருக்கிறார்கள்.
நீங்கள் அங்கும் அங்கொன்றும் இங்கொன்றுமாக கண்டும் காணாமல் சாதியை சொல்லி, மதத்தை சொல்லி, கட்சியை சொல்லி, அரசியல் செய்து கொண்டிருக்கப் போகின்றோமா? அடுத்த தலைமுறைக்கான நிலத்தை மீட்டெடுத்து பாதுகாக்கப்பட்ட பகுதியாக, இந்த மண்ணினுடைய வளத்தை பாதுகாத்து வைத்தேன் என்று மனநிறைவோடு வாழப் போகிறீர்களா என்ற கேள்வியை முன்வைக்கிறேன் என தெரிவித்தார்.