Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஒண்ணுமே கிடையாது…! ”புட்டு புட்டு வைத்த கெஜ்ரிவால்” ஆட்டம் காணும் பாஜக ..!!

கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் 75 சதவீதத்துக்கும் அதிகமான பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். 

கொரோனா வைரஸின் தாக்கம் டெல்லியிலும் அதிக அளவில் இருந்து வருகிறது. அங்கு மட்டும் இன்று ஒரே நாளில் 381 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 6,923 ஆக அதிகரித்தது. 73 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 2,069பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்கொரோனா  பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கும் அறிகுறிகளான காய்ச்சல், தும்மல், உடல் சோர்வு போன்றவை எதுவுமே இல்லாமல் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி மாநில அரசின் மருத்துவமனை ஆம்புலன்சுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் மருத்துவமனை ஆம்புலன்சில் பயன்படுத்திக் கொள்வதற்கு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசுக்கு தேவைப்படும்போது தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படும். அதேபோல கொரோனாவின் சில அறிகுறி இருப்பவர்கள் மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி வீட்டிலிருந்தே சிகிச்சை பெற மேற் கொள்ளப் படுவார்கள்.

டெல்லியில் மட்டும் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் 75 சதவீதத்துக்கும் அதிகமான பேருக்கு எந்த அறிகுறியும் இல்லாமல் இருப்பதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த பேட்டி பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ளது. ஒரு பெருந்தொற்றால் இக்கட்டான காலகட்டத்தில் உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் நிலையில் நாட்டின் தலைநகரில் இருக்கின்ற ஒரு மாநில முதல்வர் தன் மாநிலத்திற்கு தேவையான ஆம்புலன்ஸ் இல்லை என்று கூறுவது சாதாரணமாக கடந்துவிட முடியாது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

டெல்லி ஒரு யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கிறது. நாட்டில் பாராளுமன்றம், பிரதமர் அலுவலகம் உட்பட அனைத்தும் தலைநகர் டெல்லியில் இருக்கும் மாநிலத்தின் அதுவும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மாநிலத்தில் அரசு மருத்துவமனைக்கு தேவையான ஆம்புலன்ஸ் வசதி கூட இல்லை என்று கூறுவது மத்திய அரசின் மீது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது. மக்கள் நல  அரசு மத்திய அரசு என்று சொல்லிக்கொண்டு இருக்கும் பாஜகவினருக்கு அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த பேட்டி சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |