ரஷ்யாவை எதிர்த்து தன்னந்தனியாக போராடிக் கொண்டிருப்பதாகவும் நாங்கள் தனித்து விடப்பட்டிருக்கிறோம் என்றும் உக்ரைன் அதிபர் வேதனை தெரிவித்திருக்கிறார்.
ரஷ்யா, உக்ரைனில் மேற்கொண்ட முதல் போரில் 137 நபர்கள் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் ராணுவத்திற்கு ஆதரவாக 10,000 தானியங்கி இயந்திரத் துப்பாக்கிகள் அந்நாட்டு மக்களுக்கு கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய படைகளிடமிருந்து நாட்டை பாதுகாப்பதற்கு செல்லும் ராணுவ அதிகாரி தன் மனைவி மற்றும் மகளிடம் கண்ணீருடன் கதறி அழுது, விடை பெற்றது பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தலைநகரிலிருந்து, கிராமங்களுக்கு மக்கள் வாகனங்கள் மூலம் செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். குண்டுவீச்சில் வீடுகள் பலமாக சேதமடைந்து, குடியிருப்புவாசிகள் பலத்த காயம் அடைந்திருக்கிறார்கள்.
இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, தன்னந்தனியாக ரஷ்யாவை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் தனித்து விடப்பட்டிருக்கிறோம் என்று வேதனை தெரிவித்திருக்கிறார்.