Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பாஸ் கிடையாதாம்… நிச்சயம் தேர்வு உண்டு…. சிக்கலில் அரியர் மாணவர்கள்… புலம்பும் பெற்றோர்கள் …!!

கொரோனா காரணமாக கல்லூரி மாணவர்களின் பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அரியர் தேர்வுக்கும் பணம் கட்டியவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு சார்பில் அறிவித்திருந்தது. இதற்கு ஆரம்பத்திலிருந்தே யுஜிசி தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது சென்னை உயர்நீதிமன்றத்திலும் தனது எதிர்ப்பை யுஜிசி தெரிவித்திருக்கிறது.

அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதில் உடன்பாடு இல்லை என்பதே அவர்களின் எதிர்ப்பாகும். இந்த நிலைப்பாட்டை பதில் மனுவில் தெரிவிக்காதது ஏன் ? என்று இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இதனால் அரியர் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுதும் வாய்ப்பு வருமா என பெற்றோர்கள் கிளம்பி போயுள்ளனர்.

Categories

Tech |