திருவள்ளூர் மாவட்டத்தில் 70 இடங்களில் எந்த தளர்வும் கிடையாது என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஊரடங்கு குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதையடுத்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (நேற்று) வரை 9 ஆயிரத்து 315 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். மேலும் 3 ஆயிரத்து 937 பேர் மட்டுமே மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கூறியுள்ளார். தமிழ்நாடு அரசு தற்போது மேற்கொண்டு வரும் தீவிர முயற்சியால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சென்ற வாரத்தில் 20 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைந்திருக்கிறது.
தற்போது வரை 64 தொழிற்சாலைகளில் 9 ஆயிரத்து 240 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. தினந்தோறும் 50 முதல் 54 இடங்களில் தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி மருத்துவ முகாம் நடத்தப்படுவதாகவும் 150 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி இருந்து வந்த நிலையில் தற்போது 475 படுக்கைகளில் ஆக்ஜிசன் வசதி ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் 103 ஆக இருந்து வந்த கட்டுப்பாட்டு பகுதிகள் தற்போது 70 ஆக குறைந்துள்ளது. அயப்பாக்கம், நெல்லூர்பேட்டை, ஆவடி போன்ற 70 கட்டுப்பாட்டு இடங்களில் எத்தகைய தொடர்புகளும் கிடையாது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.