கொரோனா குறித்து அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை செய்தது தொடர்பாக சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது
மாராட்டியதில் கொரோனா தொற்று பாதிப்பு சம்பந்தமாக இந்த வாரத்தின் தொடக்கத்தில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி மண்டல கமிஷனர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பை சிவசேனா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவின் தலையங்கத்தில் கூறியதாவது, “போர் காலம் போன்ற நிலையில் அரசு நிர்வாகத்தில் வழிமுறைகளை வழங்க ஒரு அதிகார மையம் தான் இருக்கவேண்டும். மத்தியில் பிரதமருக்கும் மாநிலத்தில் முதலமைச்சருக்கும் தான் அந்த அதிகாரம் உண்டு. இங்கு எந்தவிதமான கசப்பும் இல்லை எவரேனும் ஒரு இணையான அரசாங்கத்தை நடத்தி வந்தால் அது குழப்பத்தை கொடுக்கும்.
சரத்பவார் போல் மூத்த தலைவர் இதுபோன்ற அரசாங்கம் நடத்தப்படுவதாக உணர்ந்தால் அதை தீவிரமானதாக எடுத்துக்கொள்ள வேண்டும். எந்த ஒரு அட்டவணையும் பின்பற்றாத கவர்னர் மராட்டியத்தில் கிடைத்துள்ளார். தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் பதவியேற்றது அதிகாலையில் என்பது மக்கள் அறிவர்” என கூறியுள்ளார். அதோடு சிவசேனா பாஜகவை, காங்கிரஸ் கூட்டணியின் அரசாங்கத்தை குறை சொல்வதற்காகவே ராஜ் பவனுக்கு அடிக்கடி சென்று வருவதாக விமர்சித்துள்ளார்.