தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என்றும், பற்றாக்குறை தான் நிலவுகிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் போதிய அளவு மழை இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டு குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. வீதியெங்கும் மக்கள் காலி குடங்களுடன் தண்ணீருக்காக தண்ணீரை தேடி அலைந்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் உள்ள மக்கள் தண்ணீர் பிரச்னையால் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இதன் காரணமாக மழை வேண்டி கோயிலில் சிறப்பு யாகம் நடத்த வேண்டும் அதிமுக தலைமை செயலகம் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுரை வழங்கியது. அதன் படி அதிமுக செயலாளர்கள் யாகம் நடத்தி வருகின்றனர்.
மேலும் ஜோலார் பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் திமுகவின் துரை முருகன் இப்படி செய்தால் வேலூர் மக்கள் தண்ணீர் இன்றி பாதிக்கப்படுவார்கள் என விமர்சித்தார். மேலும் இன்று தண்ணீர் பிரச்சனைக்காக திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இந்நிலையில் அதிமுக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என்றும், பற்றாக்குறை தான் நிலவுகிறது என்று பேசினார். மேலும் பேசிய அவர், திமுக அரசியல் காழ்புணர்ச்சியால் தண்ணீர் பிரச்னையை பெரிதாக்கி போராட்டம் நடத்துகிறது. வேலூர் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் ஜோலார் பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படும்” என்று கூறினார்.