செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே.சி பழனிசாமி, நீதிமன்றமே சொல்லிவிட்டால் என்ன ? தீர்ப்புகள் திருத்தப்படலாம், தொண்டர்களது முடிவு தான் இறுதியான முடிவு. நான் ஈபிஎஸ், ஓபிஎஸ் உடன் நல்ல உறவோடு பயணிக்கின்ற காலத்திலேயே அந்த தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்ற தலைமை மாற்றப்பட்டு, பொதுக்குழுவால் நியமிக்கப்படுகின்ற தலைமை என்று வருகிறபோது, என்னுடைய எதிர்கருத்தை நான் பதிவு செய்கிறேன்.
தேர்தல் ஆணையத்திலேயே சின்னத்தை இணைந்த அண்ணா திமுக அணிகளுக்கு கொடுங்க. ஆனால் விதிகள் திருத்தத்தை ஏற்றுக் கொள்ளாதீர்கள் என்று சொன்னேன். அது குறித்து என்னுடைய வழக்கில் 31.08.2022 கூட RTIயில் நான் பதில் கேட்டேன். என்னுடைய வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. டெல்லி உயர்நீதிமன்றத்தில் அது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது.
தொண்டர்கள் எடுக்கின்ற முடிவு தான் வெற்றி அடையும். இவர்கள் முயற்சிகள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரிய வெற்றியை தராவிட்டால், ஜானகி அம்மா என்ன ஆனார்கள் ? அதுபோல் இரண்டு பேரும் ஒதுங்கி போய்விடுவார்கள். அப்போ தேர்தல் களத்தில் வெற்றி பெறுகின்றவர்கள் தான் இந்த இயக்கத்தை வழிநடத்த முடியும்.
அந்த வல்லமை இரண்டு பேரிடமும் இல்லை. அது இருந்திருந்தால் மீண்டும் அண்ணா திமுக இந்த முறை ஆட்சிக்கு வந்திருக்கும். இரண்டு பேரும் இணைந்து நிற்கின்ற போது இணைந்து நிற்கின்றபோது வரவில்லை என்றால் அதைவிட பலவீனப்பட்ட அதைவிட பிளவு பட்ட அண்ணா திமுக எப்படி நாடாளுமன்ற தேர்தலில் ஜெயிக்கும் என தெரிவித்தார்.