Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆளுநருன்னு யாருமே கிடையாது… எல்லாருமே குடைச்சல் கொடுப்பவர்கள் தான்… போட்டு தாக்கிய கம்யூனிஸ்ட்கள் ..!!

திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன்,கடந்த முறை அண்ணா திமுக தான் ஆட்சியில் இருந்தது. எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சராகவும் இருந்தார். அந்த ஆளுநர் இப்போது பஞ்சாப் மாநிலத்தில் ஆளுநராக இருக்கிறார். இங்க இருந்து குடைச்சல் கொடுத்துட்டு, இப்ப நேர அங்க குடைச்சல்  கொடுக்க போயிட்டார். யாருமே ஆளுநர் கிடையாது,  எல்லாருமே குடைச்சல் கொடுப்பவர்கள் தான். அவர்கள் தான் ஆளுநர்கள். அவர் அங்க போய் இருக்காரு.

பத்திரிக்கை தொலைக்காட்சியில் பகிரங்கமாக ஒரு செய்தி சொல்லுகிறார். பகிரங்கமாக..  ரகசியமாகவும் இல்லை,  யாரும் தனிப்பட்ட முறையில் இல்ல,  ஊடகங்களுக்கு முன்னால் பகிரங்கமாக ஒரு செய்தியை சொல்றாரு. நான் ஆளுநராக பொறுப்பேற்று இருந்த ஏறத்தாழ இந்த நான்காண்டு காலத்தில்,  பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் செய்வதற்கு 40 கோடி முதல் 50 கோடி வரை லஞ்சமாக பெறப்பட்டது.

அப்படின்னு பகிரங்கமாக சொல்றாரு. எடப்பாடி தான் முதலமைச்சர்.  அவர் வாங்கினாரா ? வாங்கலையா ? எனக்கு தெரியாது. அதுக்கு நான் போகல. சொல்றத ஒரு ஆளுநர் சொல்றாரு. நான் பொறுப்பேற்ற போது இப்படி நடந்தது. அவர் பொறுப்பேற்ற போது அண்ணா திமுக தான் ஆட்சியில் இருந்தது. கிட்டத்தட்ட 1 1/4 ஆண்டு ஆயிருச்சு. யாராவது இந்த ஆட்சியை பற்றி தவறா சொல்றாங்க ? தப்பா சொல்றாங்களா ? எந்த அமைச்சர பத்தியும் சொல்லல,  முதலமைச்சரை பற்றியும் சொல்லல,  யாரை பற்றியும் சொல்லல.

ஒரு நல்ல ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தலைவரே பாராட்டுவதற்காக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி. அவர் முதலமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார். கட்சியினுடைய தலைவராக பொறுப்பேற்று இருக்கிறார். இரண்டு பணிகள்.  இந்த இரண்டு பணியும் அல்லாமல் இதைவிடம் மிக மேலான பணி..   இன்னொரு பணியை மேற்கொண்டு இருக்கிறார் என்பதுதான் இன்றைக்கு மிக முக்கியமானது என தெரிவித்தார்.

Categories

Tech |