இந்தியாவில் கொரோனா நவம்பர் மாதம் கொரோனா உச்சம் அடையும் என்ற செய்தியை ICMR மறுத்துள்ளது.
நவம்பர் மாத மத்தியில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு என்பது உச்சகட்டத்தை அடையும் என்றும், அந்த காலகட்டத்தில் படுக்கைகள் மற்றும் வென்டிலேட்டர் பெருமளவில் பற்றாக்குறை ஏற்படும் என்ற அதிர்ச்சிகரமான ஒரு ஆய்வு முடிவுகள் வெளியாகி இருந்தது. அதுவும் இந்த ஆய்வு முடிவுகளை ICMR என்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டு இருந்ததாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. அது ஊடகங்களில் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அதனை அதிகாரப்பூர்வமாக ICMR மறுக்கின்றார்கள்.
ICMR தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த மாதிரியான எந்த ஆய்வையும் நடத்தவும் இல்லை, வெளியிடவும் இல்லை என்று தெரிவித்து இருக்கின்றார்கள். இது சற்று நிம்மதி அளிக்கும் வகையில் இருக்கின்றது. முன்னதாக உலக சுகாதார நிறுவனம் கூட ஜூலை மாதத்திற்குப் பிறகு இந்தியாவில் மிக அதிக அளவில் கொரோனா பாதிப்பு இருக்கும் என்று ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தார். தற்போது சூழ்நிலையில் அது கிட்டத்தட்ட நிகழ்ந்து வருகிறது. ஜூன் மாதத்தில் மிக அதிகமாக கொரோனா இருந்து வரக்கூடிய நிலையில் தற்போது ICMR தெரிவித்துள்ள கருத்து மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.