Categories
மாநில செய்திகள்

’என் முகத்தில் பதற்றம் இல்லை..நான் கடவுளை நம்புகிறேன்’: டி.ராஜேந்திரர்

சென்னையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வாக்களித்துவிட்டு நடிகர் டி ராஜேந்திரர் செய்தியாளர்களிடம் பேசினார். அவரது அணி பண பட்டுவாடாவில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவன் நான். முன்னாள் மாநில சிறு சேமிப்பு துறையின் துணைத் தலைவராக இருந்தவன் நான். எல்லாரும் சொன்னாங்க ஏற்கனவே நிறைய பேர் முயற்சி செய்து விட்டார்கள், கட்டடம் கட்ட முடியவில்லை என்று தெரிவித்தார்கள். நான் என்னை நம்பவில்ல,  இறைவனை நம்புகின்றேன்.

என் அப்பன் சிவபெருமான் இருக்கின்றானே, அவருடைய மகன் யார் ? அவன் பையன் யார் ? அவன்தான் முருகன். முருகனை நம்பி தான். மனிதன் தன்னை நம்பினால் தோற்றுவிடுவான். இறைவனை நம்பி செய்தால் அவன் ஜெயித்திடுவான். முயற்சி என்பது மனிதன் கையில், முடிவு என்பது இறைவன் கையில் ’என் முகத்தில் பதற்றம் இல்லை..நான் கடவுளை நம்புகிறேன்’ என டி.ராஜேந்தர் தெரிவித்தார். முன்னதாக தேர்தல் முடிவு வெளியாகி டி. ராஜேந்தர் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |