Categories
அரசியல் மாநில செய்திகள்

தெம்பு இல்ல… பயமா இருக்குது…. ஸ்டாலின் வாக்குமூலம்… வச்சு செய்த எடப்பாடி…!!

அதிமுகவின் 50ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த போது கம்பீரமா பேசினார். உள்ளாட்சி பிரதிநிதிகள் யாராவது தவறு செய்தால்,  நான் சர்வாதிகாரியாக மாறிவிடுவேன் என்ற எச்சரிக்கை செய்தார். அதேபோல திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் எவராவது தவறு செய்தால் சர்வாதிகாரியாக மாறி நான் நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னார்.

அதே ஸ்டாலின் அண்மையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் நான் காலையில் கண்விழித்து எழுகின்ற பொழுது,  கட்சியிலே என்ன பிரச்சனை ஏற்பட்டு விடுமோ,  என்கின்ற அச்சத்தில் கண் விழிக்கிறேன் என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். கட்சி நடத்துவதற்கு உங்களுக்கு தெம்பு இல்ல, கட்சிக்காரனே கட்டுப்படுத்த முடியல. ஆக நீ எல்லாம் ஒரு கட்சிக்கு தலைவராக இருந்தால்,  அந்தக் கட்சி எப்படி இருக்கும் ? என்பதை எண்ணிப் பாருங்கள்.

நான் ஒரு சாதாரண தொண்டன். மேடையில் வீற்றிருப்பவர்கள் சாதாரணமானவர்கள். இருபெரும் தலைவர்கள் மறைந்து விட்டார்கள். மறைந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அத்தனை உடன்பிறப்புகளும் கட்டுப்பாடோடு இன்றைக்கு இருந்து கொண்டிருக்கின்றார்கள். எங்களுடைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கியவர் பொன்மலைச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர். அதை கட்டி காத்தவர் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா.

அந்த இரு பெரும் தலைவர்களுடைய அரசியல் பள்ளியில் படித்தவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள், நிர்வாகிகள்.. இருபெரும் தலைவர்களின் அரசியல் பள்ளியில் படித்தவர்கள். ஆகவே அந்த ஒழுக்கம் எங்களிடத்திலே இருக்கின்றது. அந்த கட்டுப்பாடு அண்ணா திமுகவிலேயே இருக்கின்றது. அதனால் எங்களுடைய கட்சி கட்டுக்கோப்போடு இருக்கிறது ஸ்டாலின் அவர்களே என விமர்சனம் செய்தார்.

Categories

Tech |