ஆளைப் பிடித்து உயரவேண்டும் என்ற கேவலமான நிலை இந்தியாவில் உள்ளதாகவும், எதற்கெடுத்தாலும் சிபாரிசு தேவைப்படுகிறது எனவும் நீதிபதி கிருபாகரன் பேசியுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற தனியார் வார இதழ் துவக்க விழாவில் கலந்து கொண்ட அவர் இதனை கூறினார். மேலும் ஒருவன் உடல் நலத்தோடு வாழ்ந்தால் அதைவிட செல்வம் எதுவும் கிடையாது எனவும், உடற்பயிற்சி விளையாட்டு பற்றி தெரியாத குழந்தைகளாக இன்றைய தலைமுறையினர் உள்ளனர் எனவும் சமூக வலைதளங்கள் மக்களின் கவனத்தை மாற்றுவதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,
தற்போது மனிதர்கள் மனிதர்களிடம் பேசுவது கிடையாது மாறாக மனிதர்கள் இயந்திரங்களுடன் தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் விளையாட்டு துறையில் சரியான ஊக்கம் கொடுப்பது கிடையாது. எல்லாவற்றிலும் நம்முடைய இந்திய அரசியல் உண்டு. விளையாட்டுத் துறையில் திறமையானவர் இருந்தார் அவரை உயர்த்தி பிடிப்பதற்கு நமது நாட்டில் ஆட்கள் கிடையாது. ஆளைப் பிடித்து உயரவேண்டும் என்ற அவலமான நிலையில் இந்தியா இருக்கிறது என்று அவர் பேசினார்.