அதிமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, கடந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக 4 ஆண்டுகால ஆட்சி பேரிடர் காலம் என பேசுறாரு. பேரிடர் என்றால் என்ன என்று தெரியும் அவருக்கு ? நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பொழுது கடுமையாக வறட்சி, குடிப்பதற்கு கூட தண்ணீர் கிடையாது. சென்னைக்கு ரயிலில் இருந்து தண்ணீர் கொண்டுவந்து சேர்த்தேன்.
தமிழ்நாடு முழுவதும் வறட்சி. அப்படிப்பட்ட வரட்சியான காலத்தில் கூட தடையில்லாமல் குடிநீர் வழங்கிய அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம், அதுதான் பேரிடர். கஜா புயலால் ஏற்பட்ட வெள்ளம்… கடுமையான சேதம் டெல்டா மாவட்டத்தில்…. அதை சீர் செய்ததுதான் பேரிடர் காலத்தில் செய்த சாதனை… அண்ணா திமுக. அதற்குப் பிறகு எல்லாமே முகம் தெரியாத அளவுக்கு மாஸ்க் போட்டுக்கிட்டு இருந்தோம்.
யாரும் அடையாளம் பார்க்க முடியாது. கொரோனா வைரஸ் தாக்குதல். ஒன்றை ஆண்டுகாலம், அது பேரிடர் காலம். ஸ்டாலின் அவர்களே…. பேரிடர் காலத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சரியான முறையில் கையாண்டு, அதை சாதித்தது. பேரிடர் என்று சொல்வதற்கு உங்களுக்கு தகுதி கிடையாது. ஸ்டாலினுக்கு அருகதையும் கிடையாது. நீங்க எந்த பேரிடரை சந்திசீங்க என கேள்வி எழுப்பினார்.