விடியா தி.மு.க அரசினுடைய அமைச்சர்களுக்கு எதிராக வந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பினை திச திரும்ப தனது ஏவல் துறை மூலமாக எதிர்க்கட்சியினர் மீது மீண்டும் மீண்டும் நடத்தும் நாடகமே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை என்று அதிமுகவினுடைய இடைக்கால பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றிணை வெளியிட்டிருக்கிறார்
குரங்கின் கையில் பூமாலையும், கொள்ளிக்கட்டையும் கிடைத்தால் என்னவாகும் ? என்பது அனைவருக்கும் தெரியும் என்றும், குரங்கு பூ மாலையை புழுதியில் பிய்த்து எரியும், கொள்ளிக்கட்டையால் தன் தலையையும் சொரியும், ஊரையும் எரிக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப, அந்த குரங்கின் நிலையில் இன்றைய திராவிட மாடல் ஆட்சியாளர்கள் திராவக மாடல் ஆட்சியாளர்களாக மாறி, அல்லல்படும் தமிழக மக்களுடைய நலனுக்கு எதிராக வரிகளை விதித்தல், அதிமுக அரசு செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்களுக்கு மூடு விழா செய்தல், மற்றும் தங்களுடைய ஊழல் ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்பி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வரும் எதிர்கட்சியினரின் குரல்களை நசுக்குதல் போன்ற தீய செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
குறிப்பாக பெண்களுக்கு எதிராக உரிமை தொகையினை வழங்காதது முதல் மாணவர்களுடைய கல்வி கட்டணம் ரத்து வரை எந்த உறுதி மொழியையும் நிறைவேற்றாத இந்த விடியா திமுக அரசு, முதலில் வீட்டு வரியினை கடுமையாக உயர்த்தியதை என்றும், தொடர்ந்து இப்போது மின் கட்டணத்தையும் வானளவு உயர்த்தி இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கான தாலிக்கு தங்கம், மகளிருக்கு இரு சக்கர வாகனம் உள்ளிட்ட எண்ணற்ற நலத்திட்டங்களுக்கு மூடு விழா நடத்திய இந்த மக்கள் விரோத அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பட்டை நாமம் போட்டுள்ளது.
ரெய்டு என்ற நாடகம்:
அதுமட்டுமல்லாமல் இதனால் கொதித்து போயுள்ள மக்களுடைய துயர்துடைக்க வருகின்ற 16ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், கழகத்தில் தீவிர களப்பணி ஆட்சி வரக்கூடிய கழக செயல்வீரர்களாக இருக்கக்கூடிய இந்த அறப்போரில் முழு ஈடுபாட்டுடன் செயற்றுவதை தடுக்கவே, அவருடைய கவனத்தை திசைதிருப்ப இயக்க முன்னோடிகளான கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்பி வேலுமணி மற்றும் கழக அமைப்புச் செயலாளர், புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் மூன்றாவது முறையாக ரெய்டு என்ற பெயரில் ஒரு நாடகத்தை நடத்த இந்த விடியா அரசினுடைய முதலமைச்சர் என்ற முறையில் ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறையை ஏவல் துறையாக தற்போது ஏவி விட்டுள்ளார்.
வாய்தா மேல் வாய்தா:
ஏற்கனவே இருவரது வீடுகளிலும் இரண்டு முறை சோதனை நடத்தி வெறும் கையோடு திரும்பிய லஞ்ச ஒழிப்பு துறையினர் மூன்றாவது முறையாக சோதனை செய்வது வேடிக்கையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் மீது இந்த விடியா திமுக அரசு அரசியல் கால் புணர்ச்சியோடு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உயர்நீதிமன்ற முதல் உச்ச நீதிமன்றம் வரை குட்டு வாங்கி வருகிறது என்றும், வழக்கு தொடுத்த தனியார் அமைப்போ, வழக்கில் ஆஜராகி தங்களிடம் உள்ளதாக கூறும் ஆதாரங்களை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல், வாய்தா மேல் வாய்தா வாங்கி வருகிறது என்றும், இதிலிருந்து அவர்கள் பொய் புகார் கொடுத்திருப்பது தமிழக மக்களுக்கு நன்கு புரிந்து உள்ளது.
ஸ்டாலினுக்கு துணிச்சல்:
திராவிட அரசு நேர்மையான அரசு என்று தங்களை தாங்களே மார்தட்டிக் கொள்ளக்கூடிய இந்த வீடியோ திமுக அரசின் உடைய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் திராணி இருந்தால் உச்ச நீதிமன்றத்தால் இரண்டு நாட்களுக்கு முன்பு குட்டுப்பட்டுள்ள திமுக அமைச்சரை உடனடியாக அமைச்சரவையிலிருந்து விடுவித்து, வழக்கை விரைந்து நடத்த தயாரா ? என்று ஒரு கேள்வியை அவர் எழுப்பியிருக்கின்றார். அது மட்டும் இல்லாமல் முறைகேடு புகார்கள் பதியப்பட்டுள்ள முன்னாள் , இந்நாள் திமுக அமைச்சர்கள் 13 பேர் மீதுள்ள முறைகேடு புகார்கள் குறித்த வழக்கினை விரைந்து நடத்தி அதில் அவர்கள் மீது தண்டனை வாங்கி தருவாரா ? என்ற ஒரு கேள்வியும், தற்போது தமிழகமெங்கும் நில அபகரிப்பு செய்யும் தனக்கு வேண்டிய நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கக்கூடிய துணிச்சல் அவருக்கு இருக்கிறதா ?
பழிவாங்கும் போக்கு:
தன்னுடைய அமைச்சர்களை காப்பாற்ற நிலுவையில் உள்ள பல வழக்கைகளை நடத்தாமல், அவர்கள் வாய்தா மேல் வாய்தா வாங்குவதை தடுக்காமல், யோக்கியம் பேசும் இந்த முதலமைச்சர் எங்கள் ஆட்சியில் போடப்பட்ட, கையெழுத்திடப்பட்ட, நடைபெற்று வந்த திட்டங்களுக்கு திறப்பு விழா காண்பதை விட்டுவிட்டு எதிர்க்கட்சியினர் மீது பொய் புகார் தொடுத்து, தனது ஏவல் துறை மூலமாக பழிவாங்கும் போக்கினை கைவிட்டு, வாக்களித்த தமிழக மக்களுக்கு இனியாவது நல்லது செய்வது பற்றி சிந்திக்க வேண்டும்.
குறுக்கு வழியில் :
ஒரு சில சுயநல சக்திகளோடு இணைந்து அதிமுகவை அழிக்க நினைத்தவர்களுக்கு இந்த விடியா திமுக அரசு உதவி செய்கிறது என்றும், ஆனால் அச்சதிகளை சட்டப்படி நீதிமன்றங்கள் மூலம் சந்தித்து , சதிகளை தவிடுபொடியாக்கி, இன்று தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவோடு பலம்பொருந்திய எதிர் கட்சியாக ஆஇஅதிமுக வெற்றி நடை போட்டு வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத இந்த விடியா அரசு, மீண்டும் குறுக்கு வழியில் ஏவல் துறையின் உதவியோடு கொங்கு மட்டல செயல்வீரர் எஸ் பி வேலுமணியினுடைய வேகத்திற்கு முட்டுக்கட்டை போடும் விதமாகவும், கொரோனா காலத்தில் திறம்பட செயல் புரிந்து பொது மக்களின் பாராட்டை பெற்ற விஜயபாஸ்கர் அவர்களை முடக்கும் விதமாகவும் இன்று மூன்றாவது முறையாக தன்னுடைய லஞ்ச ஒழிப்பு துறை மூலமாக சோதனை மேற்கொண்டிருப்பதற்கு தன்னுடைய கடுமையான கண்டனத்தினை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
மடியில் கனமில்லை:
எத்தனை எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் அதனை சட்டரீதியாக எதிர்த்து போராடி வெல்வோம் என்றும், எங்கள் மடியில் கனமில்லை, அதனால் வழியில் பயமில்லை என்றும், திமுக மந்திரிகளை போல் சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைந்து தப்பிக்க பார்க்க மாட்டோம் என்றும், காவல்துறையினர் நடுநிலைமையோடு, ஆளுங்கட்சியின் உடைய அடாவடித்தனத்திற்கு அடிபணியாமல், சட்டத்தின் படி நீதி நேர்மையோடு பணியாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக ஆஇஅதிமுகனுடைய இடைக்காலப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய அறிக்கையின் வாயிலாக கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்