Categories
தேசிய செய்திகள்

“மாணவர்கள் டாய்லெட்டை சுத்தம் செய்வதில் எந்த தவறும் இல்லை” மீண்டும் சர்ச்சையை கிளப்பும் கலெக்டர்..!!

மத்தியபிரதேசத்தில்  மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்வதில் எந்த தவறும் இல்லை என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தது ,மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.  

மத்திய பிரதேச மாநிலத்தின் கந்துவா மாவட்டத்தில் உள்ள சின்ஹாரா  கிராமத்தில் ஒரு அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு பள்ளியில் மாணவர்கள் கழிப்பறையை சுத்தம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பள்ளி மாணவர்கள் சுத்தம் செய்யும் இந்த வீடியோவ பார்த்த பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த சம்பவம்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த வீடியோ குறித்து மாவட்ட ஆட்சியர் தன்வி சுந்தரியல்  விளக்கம் அளித்துள்ளார். அதில், கழிவறைகளை மாணவர்களே சுத்தம் செய்வதில் எந்தத் தவறும் கிடையாது. அவர்களுக்கு சுத்தம் செய்வது தொடர்பாக பயிற்சி கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து அவர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆகவே  இதில் எந்த வித தவறும் இல்லை என தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் இந்த கருத்து மேலும் சர்ச்சைக்கு மேல் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

Categories

Tech |