Categories
இந்திய சினிமா சினிமா

“அந்த மாதிரி பாட்டு மட்டும் தான் இருக்கு”…. பாலிவுட்டுக்காக தென்னிந்திய சினிமாவை குறை சொன்ன ராஷ்மிகா…. வைரல் வீடியோ…!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது நடிகர் விஜயுடன் சேர்ந்து வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் இப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு நடிகை ராஷ்மிகா தற்போது பாலிவுட் சினிமாவிலும் நடித்து வரும் நிலையில், குட்பை படத்தை தொடர்ந்து தற்போது மிஷன் மஞ்சு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது நடிகை ராஷ்மிகா பேசியது தற்போது சர்ச்சையாக மாறியுள்ள நிலையில், ரசிகர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அவர் பேசியதாவது, தென்னிந்திய சினிமாவில் மசாலா பாடல்கள் மற்றும் ஐட்டம் பாடல்கள் போன்றுதான் டான்ஸ் பாடல்கள் வருகிறது.

ஆனால் பாலிவுட் சினிமாவில் தான் ரொமாண்டிக்கான மெலோடி பாடல்கள் வருகிறது. நான் எதிர்பார்த்த ஒரு மெலோடி சாங் மிஷன் மஞ்சு படத்தில்‌ இருக்கிறது. இந்த பாடலை நான் கேட்க ஆவலாக இருக்கிறேன். நீங்களும் அப்பாடலை கண்டிப்பாக கேட்டுப்பாருங்கள் என்று கூறியுள்ளார். இது தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது நேரத்திற்கு தகுந்தார் போன்று பேசுவதாகவும், தென்னிந்திய பாடல்களை மட்டம் தட்டி விட்டு பாலிவுட் பாடல்களை புகழ்ந்து தள்ளியதாகவும் நெட்டிசன்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் சமீபத்தில் தான் கன்னட திரையுலகம் பற்றி பேசி நடிகை  ராஷ்மிகா சர்ச்சையில் சிக்கிக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |