Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அதிக அளவில் வாரங்க… அது திரும்ப வரகூடாது… அச்சத்தில் இருக்கும் பொதுமக்கள்…!!

கடைகள் திறந்து 3-வது நாள் ஆகியும் மது விரும்பிகள் அதிகமானோர் கூட்டமாக அலை மோதி  வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்ததால் தமிழக அரசு ஒரு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்நிலையில் 27 மாவட்டப் பகுதிகளில் அமைத்திருக்கும் மதுபான கடைகளை  திறந்துள்ளனர். இதனையடுத்து தர்மபுரி மாவட்டத்தின் எல்லையில் அமைந்திருக்கும் சுற்று வட்டார கிராமங்களான சனி சந்தை, மானியத்தை அள்ளி, வையம்பட்டி ஆகிய பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

இதனால் சேலம் மாவட்டத்தில் வசிக்கும் அதிகமான மது விரும்பிகள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் ஏராளமானோர் வந்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து மதுபான கடைகளை திறந்து 3-வது நாளாக ஆன பின்பும் அதிகமான மதுபான விரும்பிகள் இக்கிராமபுறத்தில் உள்ள அக்கடைகளின் முன்பாக கூட்டமாக குவிந்துள்ளனர். அதன் பின் இவர்கள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட நேரம் வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கிச் செல்வதை காணமுடிகிறது.

இதனால் இம்மூன்று மாவட்டத்திலும் உள்ள பொதுமக்கள் மதுபான கடைகள் திறக்கப்பட்டத்தினால் அதிகமானவர்கள் இங்கே வந்து செல்கிறார்கள் எனவும், இதில் அவர்கள் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் செயல்படுகிறார்கள் எனவும் கூறுகின்றனர். அதனால் இந்த மூன்று கிராமப்புறங்களிலும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் இது குறித்து மாவட்ட நிர்வாகம் இப்பகுதிகளில் அமைத்திருக்கும் மதுபான கடைகளை மூட நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Categories

Tech |