நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று’ படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களை கொண்டாடவைத்துள்ளது.
சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வரும் தீபாவளியன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ‘சூரரைப் போற்று’ படத்துக்குத் தடையில்லாச் சான்றிதழ் கிடைத்துவிட்டது. இதனால் உற்சாகமாக படத்தின் வெளியீட்டுப் பணிகளைத் தொடங்கிவிட்டது படக்குழு. இந்நிலையில் இன்று படத்தின் அட்டகாசமான டிரெய்லர் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் முதன் முறையாக பட்ஜெட் பிளைட்டை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத் என்பவரின் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் சூரரைப் போற்று படத்திற்கு முக்கிய இடம் உண்டு. ஏற்கனவே ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்களும் ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில் இந்த டிரெய்லர் ஒரு உணர்ச்சி பூர்வமான ரோலர் கோஸ்டர் என்றால் அது மிகையாகாது. இந்த டிரெய்லருக்கு பிறகு படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.