தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையமானது தெரிவித்திருக்கிறது.
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேலே நிலவும் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த ஐந்து நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழையும் இருக்க கூடும் என சென்னை மாநில ஆய்மையும் தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இன்று நான்கு மாவட்டங்களில் கன மழையும், சில பகுதிகளில் மிக கனமழை இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களை பொருத்தவரை ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அதே போல் திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும், அதேபோல் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளை பொறுத்தவரை அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் சில பகுதியில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நாளை முதல் அடுத்த நான்கு நாட்களுக்கும் தொடர்ந்து பெரும்பாலான மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்கள், அதேபோல் தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும், சில பகுதிகளில் மிதமான மழை இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரை அதிகபட்சமாக வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் ஆகவும், அதே போல் குறைந்தபட்சமாக வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் இடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.