செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என்பது தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கொள்கை. நாங்கள் அதை வலியுறுத்துகிறோம், அதை செய்ய முடியாத போது 11 துணை டாக்குமெண்ட் இருக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக அடையாள அட்டை, பாஸ்போர்ட்,
டிரைவிங் லைசன்ஸ், பேங்க் பாஸ் புக் ஏதாவது ஒன்றையாவது கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்பதுதான் நாங்கள் வலியுறுத்தி பொதுச்செயலாளர் சார்பில் சொல்லியிருக்கிறோம்.100% நேர்மை இருக்கனும். இன்றைக்கு கிட்டத்தட்ட வந்து இறந்தவர்களின் பெயர்களையே 5% நீக்கவில்லை. இடம் மாற்றி சென்றவர்களை மாற்றவில்லை, இரண்டு இடத்தில் பெயர் இருக்கும், அதேபோல ஒரு வீட்டிலேயே 5 பேர் இருப்பார்கள் ஐந்து பேருக்கு 10 ஓட்டு இருக்கும். இரண்டு அடையாள அட்டை இருக்கு.
அது எல்லாம் நாங்கள் சொன்னோம். உங்களுக்கு வேண்டிய ஆதாரங்களோடு கொடுத்திருக்கிறோம். இது எல்லாம் நீக்கப்படனும்னா ஒரே விஷயம் தேர்தல் பிரிவு சொன்னது போல ஆதார் இணைப்பது, இல்லை என்று சொன்னால் தேர்தல் கமிஷன் 11 வகையான டாக்குமென்ட்கள் கொடுத்திருக்கிறது. அதை எல்லாம் முழுமை பெற வேண்டும் என்ற அடிப்படையில் புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும். அப்படி தயாரிப்பதன் மூலமாக கிட்டத்தட்ட வாக்காளர் பட்டியலில் எந்த குளறுபடிகள் இருக்காது என்ற கருத்தை நாங்கள் சொல்லி இருக்கிறோம் என தெரிவித்தார்.