Categories
அரசியல் மாநில செய்திகள்

இனி தண்ணீர் பஞ்சமே வரக்கூடாது…. உத்தரவு போட்ட தமிழக முதலவர்… சென்னைக்கு சூப்பர் அறிவிப்பு!!

திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே.என் நேரு, சென்னையில் ஒரு நாள் தேவைக்கு தண்ணீர் என்பது ஆயிரம் எம்.எல்.டி தேவை. புதிய திட்டத்தை உண்டாக்க சொன்னார். சென்னைக்கு 50 ஆண்டு காலத்திற்கு தண்ணீர் பஞ்சம் வரக்கூடாது என்று சொல்லி, செம்பரபாக்கம், புழல் , பூண்டி போல இயற்கை ஏரியை உருவாக்க உத்தரவு தந்திருக்கிறார். அதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. 200 ஏக்கர் அளவில் புதிய ஏரிகளை உருவாக்குகின்ற பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதைவிட கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காக கிட்டத்தட்ட 5000 கோடி 400 எம்.எல்.டி தண்ணீர்.  அதற்கும் பணம் ஒதுக்குகின்றார். இதை நான் ஏன் சொல்கிறேன் என்று சொன்னால்…. அண்ணாமலை போன்றவர்கள் தளபதியை பார்த்து உனக்கு என்ன தெரியும் ? இந்த அரசை நடத்த தெரியுமா ? என்று சொல்வதற்காக நான் சொல்கிறேன், அனைத்து துறைகளை பற்றியும் தெரிந்த முதல்வராக…  அனைத்தையும் தெரிந்த முதல்வராக, எங்கள் இலக்காவை பார்க்கின்ற அமைச்சர்களை விட கூடுதலாக விவரம் தெரிந்த முதல்வராக…

இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். எனவே இன்றைக்கு இருக்கின்ற ஒரு அரசியல் சூழ்நிலை. நீங்கள் பார்த்தால் திமுக செய்தால் அது மாபெரும் தவறாக சொல்கிறார்கள். பத்தாண்டு காலம் நாங்கள் எதிர்கட்சியாக பணியாற்றி இருக்கிறோம். பத்தாண்டு காலத்தில் நமது கழகத் தோழர்கள் எதையும் எதிர்பாராமல் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு வேலைவாய்ப்பை உருவாக்க, அவர்கள் குடும்பத்திற்கு ஒரு நல்லது செய்வதற்கு…

அதிலும் கூட நிதி இல்லாமல்…  அரசாங்கத்தில் திட்டங்களை போட நிதி இல்லை… புதிய வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்க முடியவில்லை…  நாங்கள் பேசும்போது கூட சொன்னோம்.  பொறுமையாக இருங்கள்,  நிச்சியமாக தளபதி கைவிட மாட்டார்.  நிச்சயமாக உங்களை காப்பாற்றுவதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று சொன்னேன் என தெரிவித்தார்.

Categories

Tech |