Categories
அரசியல் மாநில செய்திகள்

குகையில் ”வைகோ” சிங்கம் இருந்துச்சு…! பார்த்ததும் நீட்டிய ஸ்டாலின்… படிக்காமல் கையெழுத்து போட்ட மூவ்மெண்ட்.. வரலாற்றை நினைவுகூர்ந்த C.M …!!

வைகோவுக்காக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், வைகோ போடா சட்டத்தில் கைதாகி வேலூர் சிறையில் அடைபட்டு இருந்தபோது, அப்போது நாடாளுமன்றத்தினுடைய தேர்தல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்து இருக்கின்றோம். அப்போது தலைவர் கலைஞர் அவர்கள், என்னையும் அண்ணன் துரைமுருகன் அவர்களையும் அழைத்து, இந்த கூட்டணி சம்பந்தமாக வேலூர் சிறையில் இருக்கக்கூடிய வைகோ அவர்களை பார்த்துவிட்டு, ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு வாருங்கள் என்று அனுப்பி வைக்கிறார்.

சிறையில் போய் பார்த்தோம். சிங்கத்தை குகையில் சந்திப்போம் என்று சொல்வார்கள், அது போல் சென்று சந்தித்தோம். குகையில் சிங்கம் மாதிரி இருந்தார். அந்த ஒப்பந்தத்தை கொடுத்தோம். படிச்சு கூட பார்க்கவில்லை. கலைஞர் சொல்லிட்டு விட்டார் என்று கையெழுத்து போட்டுக் கொடுத்தார், அதெல்லாம் இப்போது நினைவுக்கு வருகிறது.

திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் எத்தனையோ மாநாடுகள் நடைபெற்று இருக்கிறது, அந்த மாநாட்டில் அண்ணன் வைகோ பேசுகிறார் என்றால்,  அவருக்கு ஒரு பெரிய வரவேற்பு இருக்கும். அவருக்கு நினைவிருக்கோ, இல்லையோ எனக்கு தெரியாது. அவர் எப்போதுமே கரெக்டா சாப்பிடும் நேரத்தில் விடுவார்கள்.

ஏனென்றால் கூட்டம் கலைந்து விடக்கூடாது என்பதற்காக, மதிய நேரம் என்பதால்  ஒவ்வொருவரும் எழுந்து போய்க் கொண்டிருப்பார்கள். ஆனால் எல்லோரும் உட்கார்ந்து இருப்பார்கள்,  மதிய நேரத்தில் தான் அண்ணன் வைகோ பேசுவார், அதனால் யாரும் எழுந்து கூடப் போக மாட்டார்கள் நான் உட்பட என நினைவு கூர்ந்தார்.

Categories

Tech |