Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கூட வந்தது ஒரு தப்பா… நண்பருக்கு ஏற்பட்ட கதி… இருசக்கர வாகனத்துடன் இளைஞர் தப்பியோட்டம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் இருசக்கர வாகனம் வாங்க வந்ததுபோல் நடித்து அதனை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள சேலம் மெயின் ரோட்டில் இருசக்கர வாகனங்கள் விற்பனை கடை செயல்பட்டு வருகின்றது. இதனை ரவிசந்திரன் என்பவர் நடத்தி வந்துள்ளார். இந்த கடையில் விலையுயர்ந்த இருசக்கர வாகனங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன்(20) மற்றும் ஈரோட்டை சேர்ந்த வெங்கடேசன் என்ற 2 இளைஞர்கள் இருசக்கர வாங்க வேண்டும் என கடைக்கு வந்துள்ளனர். அப்போது 2 லட்சம் மதிப்புள்ள ஒரு இருசக்கர வாகனத்தை வாங்க போவதாக கூறிய ராதாகிருஷ்ணன் ஓட்டி பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

இதனையடுத்து மற்றொரு நண்பரான வெங்கடேசனை கடையிலேயே விட்டு விட்டு இருசக்கர வாகனத்தை எடுத்து சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து வெகு நேரமாகியும் ராதாகிருஷ்ணன் திரும்பி வராததால் சந்தேகமடைந்த கடை உரிமையாளர் ரவிசந்திரன் குமாரபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இருசக்கரவாகனம் வாங்குவது போல் வந்து நூதனமாக திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |