Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

ஏப்.7க்குள் தெலுங்கானாவில் கொரோனா இருக்காது – முதல்வர் சந்திரசேகராவ்

ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் தெலுங்கானாவில் கொரோனா இருக்காது என்று தெலுங்கானா முதல்வர் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதத்தில் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் 198 நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ்ஸின் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதாலும் உலக நாடுகள் இதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.இந்தியாவிலும் கொரோனா வைரஸ்ஸின் தாக்கம் வேகமாக பரவி வருகின்றது.

ஒரே நாளில் 3000 பேர் பலி... கொரோனா ...

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பு  எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி இந்தியாவில் கொரோனா பதித்தவர்கள் எண்னிக்கை 1024ஆக உள்ளது.அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில்186 பேரும் , கேரளாவில் 182 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல 27  பேர் உயிரிழந்துள்ள நிலையில் 90க்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் தெலுங்கானாவில் கொரோனா இருக்காது என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

கொரோனா இல்லாத மாநிலமாக ஏப்ரல் 7ஆம் தேதிக்குள் தெலுங்கானா மாற்றப்படும். புதிதாக யாருக்கும் பாதிப்பு வராமல் இருந்தால் ஏப்ரல் 7க்குள் தெலுங்கானாவில் கொரோனா இருக்காது என்று முதல்வர் சந்திரசேகராவ் தெரிவித்துள்ளார். தெலுங்கானாவில் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 1 குணமடைந்த நிலையில் 1 மரணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |