எதிர்காலத்தில் நீட் தேர்வில் மோசடிகள் நடைபெறாத வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று முதல்வர் பழனிசாமி உறுதியாக தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் தமிழக முதல்வர் பழனிசாமி, 424 பயனாளிகளுக்கும் ரூ 4.93 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன்பிறகு முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது, கீழடியில் 4, 5ஆம் கட்ட அகழாய்வு பணிகளுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. டிஎன்பிஎஸ்சி போன்ற தன்னாட்சி பெற்ற அமைப்பு முடிவுகளில் தமிழக அரசு தலையிடுவது இல்லை என்று பேசினார்.
மேலும் தமிழின் தொன்மை குறித்து பிரதமர் மோடி ஐநாவில் பேசியதை பெருமையாக கருதுகிறேன். பாஜக – அதிமுக கூட்டணி தொடர்கிறது என பாஜகவிலேயே பலர் கூறியிருக்கிறார்கள். பாஜக – அதிமுக கூட்டணி தொடரும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
மேலும் பேசுகையில், தமிழகத்தில் பாஜக தலைவர் தற்போது இல்லாததால் அவர்களை சந்திக்க வாய்ப்பு குறைவாக உள்ளது. இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடும் என கூட்டணி கட்சிகளுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. நீட்தேர்வு ஆள்மாறாட்டம் மோசடிகள் தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. எதிர்காலத்தில் மோசடிகள் நடைபெறாத வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் உறுதியாக தெரிவித்தார்.