நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் முதற்கூட்டம் நேற்று மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மின்சாரத் துறைஅமைச்சர் தங்கமணி, சமூகநலத் துறை அமைச்சர் சரோஜா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சாரதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களுடன் நாமக்கல் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர்கள் கலந்துரையாடினர்.
பின்னர் அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோடைக்காலத்தில் தமிழ்நாட்டிற்கான மின் தேவை 17 ஆயிரம் மெகாவாட் கையிருப்பில் உள்ளதால் மின்வெட்டை சமாளிக்க போதிய மின்சாரம் உள்ளது. இதனால் தமிழ்நாட்டில், ஒரு நிமிடம் கூட கோடைக்காலத்தில் மின் தடை ஏற்படாது எனத் தெரிவித்தார்.