செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், ஆர்எஸ்எஸ் அணி வகுப்பு ஊர்வலம் 1925 விஜயதசமி அன்று ஆர்எஸ்எஸ் துவக்கப்பட்ட காலத்திலிருந்து, சங்கம் கொண்டாடுகின்ற ஆறு விழாக்களில் ஒன்று விஜயதசமி விழா. அந்த விழாவையொட்டி பேரணி நடைபெறும், அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறும். சென்ற ஆண்டு கூட நடைபெற்றது. சில இடங்களில் தடை செய்திருக்கிறார்கள், ஆனாலும் சென்ற ஆண்டு கூட தமிழகத்தில் விஜயதசமி ஊர்வலம், ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடந்திருக்கிறது.
ஆர்எஸ்எஸ் ஒரு ஒழுக்கமான, கட்டுப்பாடான, தேசபக்தி உள்ள ஒரு அமைப்பு. இதுவரைக்கும் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்று எந்த இடத்திலும் கலவரம் வந்ததில்லை, அதற்கான ஆதாரங்கள் இல்லை. PFIயை தடை செய்து இருக்கிறார்கள் என்றால் PFIயும், ஆர்எஸ்எஸ்யும் ஒன்றில்லை. PFI-ஐ வந்து தடை செய்ய வேண்டும் என்ற முயற்சியில் கேரளா மாநில கம்யூனிஸ்ட் அரசாங்கம் எடுத்தது, தெலுங்கானா அரசாங்கமும் எடுத்தது. PFI தடை செய்ய வேண்டும் என்று சொல்லி கேரள கம்யூனிஸ்ட் கட்சியினர் பல்லாண்டு காலமாக கூறி வருகிறார்கள்.
இன்றைக்கு நம்முடைய தேசிய புலனாய்வு முகமை நாடு முழுக்க சோதனை நடத்தி, ஆதாரங்களின் பெயரிலே அது ஒரு தேச விரோத இயக்கமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆர் எஸ் எஸ் அப்படி இல்லை, ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்ட இயக்கமல்ல. ஆர்எஸ்எஸ் அணி வகுப்பு நடத்துவது என்பது தமிழகத்திலே அது மத நல்லிணத்திற்கு தான் வழிவகும். ஆர்எஸ்எஸ் என்பது அரசியல் சார்பற்ற, மத சார்பற்ற ஒரு அமைப்பு. தன்னார்வ தொண்டு அமைப்பு. அந்த அமைப்பில் இளைஞர்களுக்கு பயிற்சி கொடுக்கிறார்கள், அந்த பயிற்சியினுடைய, ஒழுக்கத்தை கட்டுப்பாட்டை வெளிப்படுத்தக்கூடிய வகையில் பேரணி நடைபெறுகிறது என தெரிவித்தார்.