தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் அண்மையில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, நயன்தாரா மற்றும் சமந்தா கதாநாயகிகளாக நடித்திருந்தனர். இந்த படத்திற்குப் பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்துடன் இணைந்து ஏகே 62 திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் சூட்டிங் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.
இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் சமீபத்திய பேட்டி ஒன்றில் என்னுடைய படங்களில் ஹீரோ புகைப்பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற காட்சிகள் இருக்காது என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார். அதன் பிறகு நானும் ரவுடிதான் திரைப்படம் புதுச்சேரியில் எடுக்கப்பட்ட போது அதில் ஹீரோ ஒருமுறை கூட மது அருந்துவது மற்றும் புகை பிடிப்பது போன்ற காட்சிகளை நான் படமாக்கவில்லை. மேலும் இது பற்றி சென்சார் போரில் கூட வியப்பாக கேள்வி எழுப்பினர் என்று கூறியுள்ளார்.