கொரோனாவால் இங்கிலாந்து மக்கள் மத்தியில் பெரும் கலவரங்கள் வெடிக்கக் கூடும் என அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
கொரோனா தொற்றின் பாதிப்புகளால் இந்த கோடையில் இங்கிலாந்து நாடு முழுவதும் கலவரம் வெடிக்கும் என அறிவியல் ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து இங்கிலாந்து அரசின் அறிவியல் ஆலோசனை குழுவில் உறுப்பினராக இருந்து வரும் சமூக உளவியல் பேராசிரியர் கிளிபோர்ட் ஸ்டாட் கூறுகையில் “அதிகப்படியான வேலை இழப்புகள் இன மற்றும் பொருளாதார சமத்துவமின்மை பற்றிய கவலைகளால் இனி வரும் மாதங்களில் மக்கள் மத்தியில் மோதல் ஏற்படக்கூடும்.
ஊரடங்கினால் அதிக வசதியான மற்றும் ஏழை பகுதிகளுக்கு இடையே பிளவு உருவாகி பிரச்சனை ஏற்படக்கூடும். முறையான போலீ-சமூக உறவுகளை ஏற்படுத்துவதற்கு இப்போது காவல்துறை முயற்சி செய்யாமல் இருந்தால் இந்தக் கோடையில் பெரும் கலவரங்கள் வெடிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது” என கூறினார்