சென்னை உயர்நீதிமன்றத்தில் வாய்தா பெற்றுக் கொண்டு அவசரஅவசரமாக கைது செய்கிறது என்று திமுக தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.
திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பட்டியலின சமுதாய மக்களுக்கு வழங்கிய இட ஒதுக்கீடு குறித்து பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது இதற்கு அவர் மீது காவல் நிலையத்தில் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்த வழக்கு பதிவின் கீழ் நின்று அவரை இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் படி இன்று காலை போலீசார் அவரை கைது செய்தனர் இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆர் எஸ் பாரதி கைதுக்கு பாஜகவினர் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா ஆதரவு தெரிவித்த நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்தார் குறிப்பாக ஆளுங்கட்சியைச் சரமாரியாக சாடினார். இதே அதிகாரத்தில் இது அதிகார துஷ்பிரயோகம் அமைச்சர்கள் முதலமைச்சர் மீது கொடுக்கப்பட்ட புகாருக்கு எதிராக புகார் கொடுக்கிறார்கள் என்பதற்காக அதிமுக அரசு இப்படி செய்யப்படுகிறது டெல்லியின் எடுபுடி என்றெல்லாம் திமுக இந்த சலசலப்புக்கு அஞ்சாது என்றெல்லாம் கண்டன அறிக்கை தெரிவித்திருந்தார்.
இதனிடையே ஆர் எஸ் பாரதி எழும்பூர் நீதிமன்ற செல்வகுமார் இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆர் எஸ் பாரதி சார்பில் வழக்கறிஞர்கள் சம்பத், சண்முகசுந்தரம், இளங்கோ, கிரிராஜன் உள்ளிட்டோர் ஆஜராகினர். இதில் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் பல வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இது அரசியல் காழ்ப்புணர்ச்சி வழக்கு, முதல்வர், அமைச்சர்கள் மீது ஆர்.எஸ் பாரதி பல்வேறு ஊழல் வழக்குகளை போடுகின்றார் அதனால் இந்த வழக்கு போடப்பட்டுள்ளது என்று வாதிடப்பட்டது.
மேலும், இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது. உயர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை வழக்கு வந்தபோது அடுத்த புதன்கிழமைக்கு அரசு தரப்பில் அரசு தரப்பில் வாய்தா பெற்றுக் கொண்டார்கள். இன்றைக்கு அவசரஅவசரமாக கைது பண்ணுகிறார்கள் என்று நீதிபதி முன்பு திமுக அதிமுகவை போட்டுக் கொடுத்துள்ளது. மேலும் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் இது செல்லாது என்ற வாதத்தை திமுக தரப்பு முன்வைத்ததயடுத்து ஆர்.எஸ். பாரதிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.