Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோவிலுக்கு சென்ற பூசாரி….. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு….!!

பூசாரியின் வீட்டின் பூட்டை உடைத்து 650 கிராம் வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சக்கராஜா கோட்டை பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டை பூட்டி விட்டு ஒரு கோவிலுக்கு பூஜைக்கு சென்றுவிட்டார். இதனை அடுத்து சீனிவாசன் பூஜை முடித்து விட்டு வீட்டிற்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அவரின் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 650 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 2 குத்து விளக்குகளை திருடி சென்றுவிட்டனர். இது குறித்து சீனிவாசன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |