தந்தை – மகன் என இரட்டை வேடங்களில் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான படம் பிகில். அட்லி இயக்கிய இந்தப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் விஜயின் மைக்கேல் கதாபாத்திரம் கால்பந்தாட்ட பயிற்சியாளராவும், ராயப்பன் கதாபாத்திரம் லோக்கல் டானாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், இந்துஜா, யோகி பாபு, கதிர், ஷாக்கி ஷெராஃப், விவேக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பிகில் பெற்று வருகிறது. அட்லி-விஜய் கூட்டணியில் முதலில் வெளியான படம் தெறி. இப்படம் ரசிர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதனையடுத்து இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. விஜய் நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் ரவி தேஜா நடிக்கிறார். மாஸ் மகாராஜ் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை கோபிசந்த் மாலினேனி இயக்குகிறார். பி.மது தயாரிக்கிறார். விரைவில் படத்தின் மற்ற நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ரவி தேஜாவிற்கு இப்படம் 66ஆவது படமாகும்