Categories
கிரிக்கெட் விளையாட்டு

தெரியாம நடந்துடுச்சு…! அவர்களை சும்மா விட மாட்டோம்… இந்திய அணியிடம் ஆஸி மன்னிப்பு…!!

இந்திய வீரர்களிடம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் பாதுகாப்பு தலைவர் சீன் கரோல் மன்னிப்பு தெரிவித்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது மைதானத்தில் இருந்த முகமது சிராஜை  இனரீதியாக இழிவுபடுத்திய ரசிகர்களை மைதானத்திலிருந்து மைதான பாதுகாப்பு ஊழியர்கள் வெளியேற்றினர்.

மேலும் இச்சம்பவம் குறித்து இந்திய வீரர்களிடம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மன்னிப்பு கூறியுள்ளது. சிட்னி டெஸ்ட் போட்டியின் போது ரசிகர்களின் இச்செயலுக்கு இந்திய வீரர்களிடம் நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு பாதுகாப்பு தலைவர் சீன் கரோல் தெரிவித்துள்ளார். மேலும் இச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்தார்.

Categories

Tech |