ஹைதராபாத்தில் வாட்ஸ் அப் செயலி மூலம் வந்த காளை எடுத்த இளைஞரை மர்ம நபர்கள் மிரட்டி பணம் பறித்துள்ளனர். இது தொடர்பாக அந்த இளைஞர் கூறியதாவது. “சமீபத்தில் எனது வாட்ஸ்அப் செயலியில் வீடியோ அழைப்பு வந்தது. அதனை எடுத்தபோது ஒருவரும் இல்லை எந்த குரலும் கேட்கவில்லை. பின்பு அழைப்பை கட் செய்தேன். ஒரு சில நிமிடம் கழித்து எனது மார்பிங் செய்யப்பட்ட வீடியோ ஒன்று எனது தொலைபேசியில் வந்தது. அதனை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.
பின்பு என்னிடம் உடனடியாக பணம் அனுப்பவில்லை என்றால் வீடியோவை இணையதளங்களில் பரப்பி விடுவேன் என்று மிரட்டினார்கள். இப்படியே மிரட்டி முதலில் ரூபாய் 5000 பிறகு 30,000 மற்றும் 20 ஆயிரம் வரை பிடுங்கி விட்டார்கள். இதுபோன்று மிரட்டல் தொடர்ந்து வந்ததால் நான் காவல்துறையிடம் புகார் அளித்தேன்” என்று கூறியுள்ளார். இது போன்ற ஏமாற்று வேலைகள் நடப்பதாக காவல்துறையினர் முன்னதாகவே பலமுறை எச்சரிக்கை விடுத்தும் தொடர்ந்து மோசடி கும்பலிடம் பலர் சிக்குவது குறித்து காவல்துறையினர் கவலை தெரிவித்துள்ளனர்.