அதிவேகமாகப் பரவி வரும் காட்டுத்தீயினால் ஆயிரக்கணக்கான வீடுகளில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேருமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
தெற்கு பிரான்சில் Saint-Tropez என்ற நகரம் அமைந்துள்ளது. அந்த நகரத்தில் காட்டுத்தீயானது அதிவேகமாக பரவி வருகிறது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்த தகவலின் பேரில் அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். இந்த காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் சுமார் 750 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் காற்று வேகமாக வீசுவதால் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான வீடுகளில் வசிக்கும் மக்களை தங்களது வீட்டை விட்டு வெளியேருமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.