Categories
மாநில செய்திகள்

தெற்கு ரயில்வே போட்ட புதிய திட்டம்…. இனி எக்கச்சக்க வருமானம் வரப்போகுது….!!!

தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா பரவலின் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாகப் குறைந்த நிலையில் முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் தொடங்கப்பட்டது. அனைத்து ரயில் நிலையங்களிலும் கொரோனா வழிகாட்டு  நடைமுறைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகின்றன.அதுமட்டுமில்லாமல் ரயில் நிலையங்களில் பயணிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் அபராதம் ரூ .500 வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சரக்கு ரயில் போக்குவரத்தில் அதிக வருவாய் ஈட்டுவதற்கு தெற்கு ரயில்வே ஓர் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்திற்கான முன்னேற்பாடுகளை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் உள்ள சரக்கு போக்குவரத்து வணிக பிரிவில் நடைபெறுகிறது.மேலும் இதற்காக தனி குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவும் தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து சரக்கு போக்குவரத்திற்காக சரக்கு ரயில்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் கார் நிறுவனங்கள்,விவசாய கழிவுகள் ,உணவுப் பொருட்கள் மற்றும் நீலகிரி போன்றவற்றை கொண்டு செல்ல முடியும். இந்தத் திட்டத்தின் முதல் கட்டமாக சென்னை ராயபுரம் ரயில்வே நிலத்தில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு செல்லம் சரக்கு ரயில் நிலையத்துக்கு ஆறு ஆண்டுகளுக்கு குத்தகை விடப்பட்டுள்ளது. இந்த சரக்கு ரயில்வே திட்டம் தனியார் நிறுவனங்களுக்கும் பெரும் உதவியாக இருந்து தெற்கு ரயில்வே அதிக வருமானம் ஈட்டப்படும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |