ஈராக் நாடாளுமன்ற தேர்தல் ஓராண்டுக்கு முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது.
ஈராக் நாட்டின் தென் மாகாணங்களில் ஊழலுக்கு எதிராகவும், அரசியல் சீர்திருத்தங்களை வலியுறுத்தியும் கடந்த 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பொதுமக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் 600க்கும் மேற்பட்டவர்கள் தங்களது உயிரினை இழந்துள்ளனர்.
இதனையடுத்து அடுத்த வருடம் நடைபெறுவதாக இருந்த தேர்தல் முன்கூட்டியே தற்பொழுது நடந்துள்ளதை அந்நாட்டு அரசாங்கமானது ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையில் போராட்டங்களை ஒடுக்க அரசாங்கம் அடக்குமுறையை மேற்கொண்டதால் பல போராட்டக்காரர்கள் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.இந்த சமயத்தில்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.