Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

4 நாட்களுக்கு விடுமுறை…. ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு…. ஆட்சியரின் தகவல்….!!

உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதினால் 4 நாட்களுக்கு பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 6-ஆம் தேதி மற்றும் 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பள்ளிகளும் தேர்தல் வாக்குசாவடி மையங்களாக செயல்பட இருக்கின்றது. அதன்பின் ஆசிரியர்கள் உள்ளாட்சி தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு செல்ல இருக்கின்றதால் 5 மற்றும் 8-ஆம் தேதிகளில் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.

இதனையடுத்து உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் 6, 9-ஆம் தேதிகளில்  பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து 7-ஆம் தேதி பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |