Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“தேர்தலை முன்னிட்டு” அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு…. பார்வையாளரின் தகவல்….!!

கலெக்டர் அலுவலகத்தில் வைத்து வாக்கு எண்ணிக்கை மைய அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மைய அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு கலெக்டர் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இதற்கு தேர்தல் பார்வையாளர் எம். பிரதீப்குமார் தலைமை தாங்கியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது, இம்மாவட்டத்தில் 19-ஆம் தேதி வாக்குப்பதிவும் மற்றும் 22-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் அனைவரும் தேர்தல் நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

அதன்பின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக சீல் வைக்கப்பட்டு இருக்கிறதா என்பதையும் மற்றும் வரிசை எண்கள் சரியாக இருக்கிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். இதனையடுத்து தங்களின் பணிகள் குறித்த சந்தேகங்களை தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும் எனவும், தபால் வாக்கு சீட்டுகள் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்து வாக்குகளை எண்ண வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |