Categories
உலக செய்திகள்

திடீரென ஒத்திவைக்கப்பட்ட தேர்தல்…. தகவல் வெளியிட்ட செய்தி தொடர்பாளர்…. படுகொலை செய்யப்பட்ட அதிபர்….!!

9 உறுப்பினர்களை வைத்து தேர்தல் கவுன்ஸில் நடத்திய ஆலோசனையின் விளைவாக கரீபியன் பெருங்கடல் நாட்டில் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அந்நாட்டிலுள்ள தேர்தல் கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

கரீபியன் பெருங்கடல் நாடான ஹைட்டியின் அதிபராக ஜோவனேல் என்பவர் இருந்துள்ளார். இவர் கடந்த மாதம் 7 ஆம் தேதி அவருடைய வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக அந்நாட்டில் அடுத்த மாதம் 28ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருந்துள்ளது.

இந்நிலையில் அந்நாட்டின் தேர்தல் கவுன்சில் 9 உறுப்பினர்களைக் கொண்டு ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. இதன் விளைவாக அந்நாட்டில் நடைபெறவிருந்த அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 7-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக ஹைட்டியின் தேர்தல் கவுன்சில் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். மேலும் இதற்கான முழு விவரங்களையும் அவர் வெளியிடவில்லை.

Categories

Tech |