தேர்தலுக்காக நடைபெறுகின்ற பணி அனைத்தையும் கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தலின் வாக்கு சீட்டுகள் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நிறைவு செய்யப்பட்டவுடன் அச்சடிக்க வைக்கப்பட்டிருக்கும் வாக்குச்சீட்டு பெட்டிகளை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
இதனை அடுத்து வாலாஜா பகுதிகளில் வேட்பாளர்பட்டியல் பதிவேற்றம் செய்வதையும் கலெக்டர் ஆய்வு செய்துள்ளார். இதனை போல் வாக்காளர்களின் பெயர் நீக்கல் மற்றும் சேர்த்தல் பணிகள் நடைபெறுவதையும் ஆய்வு செய்துள்ளார். மேலும் வாக்காளரின் துணை பட்டியல் இறுதி செய்யும் பணிகளையும் மற்றும் கணினியில் பதிவேற்றம் செய்வதையும் கலெக்டர் ஆய்வு செய்துள்ளார்.