Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தீவிரமாக நடைபெற்ற பணி…. போலீஸ் பாதுகாப்பில் வாக்குப்பெட்டிகள்…. ஆட்சியரின் ஆய்வு….!!

தேர்தலை முன்னிட்டு வாக்குப்பெட்டிகள் அனைத்தும் காவல்துறையினரின் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவுக்கு தேவையான வாக்குப்பெட்டிகள் மற்றும் உபகரணங்கள் ஆகியவை பலத்த காவல்துறையினர் பாதுகாப்புடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதன்பின் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனையடுத்து தூய நெஞ்சக் கல்லூரியில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய இருக்கும் அலுவலர்களுக்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ள நிலையில் அதை கலெக்டர் ஆய்வு செய்துள்ளார். அதற்குப் பிறகு அலுவலகத்தில் தேர்தலுக்கு தேவையான உபகரணங்களை வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பும் பணிகளை பார்வையிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து கந்திலி மற்றும் நாட்டறம்பள்ளி ஊராட்சி அலுவலகங்களில் வாக்குச்சாவடி மையங்களுக்கு பொருட்களை அனுப்பும் பணிகளையும், தனியார் பள்ளியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஆணை வழங்கப் பட்டிருப்பதையும் பார்வையிட்டு கலெக்டர் ஆய்வு செய்துள்ளார்.

Categories

Tech |