தேர்தலுக்கு தயாராக வைக்கப்பட்டிருக்கும் வாக்கு பெட்டிகளை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டுள்ளார். இந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 29 ஊராட்சிகள் இருக்கின்றது. இதில் மொத்தமாக 213 வார்டுகள் உள்ளது. இதனை அடுத்து இந்த ஊராட்சிகளில் ஆண், பெண் என மொத்தமாக 51, 559 வாக்காளர்கள் இருக்கின்றனர்.
பின்னர் அலுவலகத்திலிருக்கும் வாக்கு பெட்டிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். அதன்பின் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமையும் கலெக்டர் பார்வையிட்டுள்ளார். அப்போது அனைவரையும் தடுப்பூசி செலுத்தி கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் என பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து பெரும்பாக்கத்தில் நடைபெற்ற தடுப்புசி முகாமையும் கலெக்டர் ஆய்வு செய்துள்ளார்.