Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நடவடிக்கை எடுக்கவில்லை…. அந்தரத்தில் தொங்கும் மின்விளக்கு…. பொதுமக்கள் சிரமம்….!!

அந்தரத்தில் தொங்கும் தெரு மின்விளக்கை சீர் செய்யுமாறு பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாபுராவ் தெருவில் இருக்கும் மின்சார கம்பத்தில் மின்விளக்கு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மின் கம்பத்தில் இருந்த மின் விளக்கு இணைப்பு திடீரென துண்டித்து மின் ஒயருடன் அந்தரத்தில் தொங்கிய நிலையில் கிடந்துள்ளது.

இது பற்றி அப்பகுதி மக்கள் மின்சாரத் துறைக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருக்கிறது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும், அந்தரத்தில் தொங்கியபடி இருக்கும் தெரு விளக்கை சீர் செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |