தெரு நாய்கள் கடித்து குதறியதில் பெண்மான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி வட்டாரத்தில் வேலாயுதம்பாளையம், சங்கமாங்குளம், தாமரைக்குளம், நாதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. தற்போது அவினாசி பகுதியில் பருவ மழைகள் பெய்யாத காரணத்தால் குளம், குட்டைகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. அதனால் காட்டில் வசிக்கும் மான்கள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அருகில் உள்ள கிராமப்புற பகுதிகளுக்கு வருகின்றது.
இந்நிலையில் நாதம்பாளையம் கூட்டுறவு வங்கி பகுதிக்கு பெண்மான் ஒன்று தண்ணீர் தேடி வந்துள்ளது. அப்போது அங்கிருந்த தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து பெண்மானை கடித்து குதறியது. இதனால் பலத்த காயமடைந்த பெண்மான் பரிதாபமாக உயிரிழந்தது. இதனைப் பார்த்த அந்த வழியில் சென்ற மக்கள் வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இறந்து கிடந்த மானின் உடலை கைப்பற்றி வனப்பகுதிக்குள் புதைத்தனர்.