தமிழக அரசு பணிகளுக்காக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் ஒவ்வொரு வருடமும் தேர்வு நடத்தி வருகிறது. இது குறித்து பல்வேறு விதிமுறைகளை அரசு அறிவித்து வருகிறது. அதிலும் குறிப்பாக டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 4 தேர்வில் தமிழ்மொழி தாளில் 40 மதிப்பெண்கள் பெறுவது கட்டாயம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஆங்கில மொழித்தாள் நீக்கப்பட்டு தமிழ் மொழித்தாள் மட்டும் இருக்குமாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும் குரூப்-2, குரூப்-4 தேர்வுகள் குறித்த தகவல்களை டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்புகள் 2022-ஆம் வருடம் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்றும் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்புகள் 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் அறிவிப்புகளை வெளிவந்த 75 நாட்களுக்கு பிறகு தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. மேலும் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மை தேர்வுக்கான தேதி குறித்த அறிவிப்புகள் தற்போது வெளியாகி உள்ளது. இதனையடுத்து இந்த குரூப் 1 தேர்வு 66 பணியிடங்களுக்கு நடைபெற்றது.
இத்தேர்வில் 1,31,701 பேர் பங்கேற்றனர். இந்த தேர்வில் 3,800 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வருகிற 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4, 5, 6-ம் தேதிகளில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அத்துடன் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது சான்றிதழை வருகின்ற டிசம்பர் 22-ம் தேதியில் இருந்து ஜனவரி 5-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. மேலும் https://tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலமாகவும் தங்களது சான்றிதழை பதிவேற்றம் செய்துகொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.