Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“நல்லாசிரியர் விருது” தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள்…. அதிகாரிகளின் தகவல்….!!

சிறப்பாக செயல்பட்டதற்காக ஈரோட்டில் 11 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட இருக்கின்றது.

முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளியில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு மாநில அளவில்  டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை கொடுகின்றனர். இத்துடன் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பதக்கமும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த வருடத்திற்கான சிறந்த ஆசிரியர்களை முடிவு செய்ய மாவட்ட மாநில அளவிலான குழுக்களை பள்ளிக்கல்வித்துறை நியமித்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் வசித்து வரும் 11 ஆசிரியர்கள் உட்பட மாநிலம் முழுவதும் 385 நபர் டாக்டர் ராதாகிருஷ்ணன் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.

அதாவது சித்தோடு அரசு மேல்நிலை பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் ரத்தினசபாபதி, குட்டிபாளையம் அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர் சந்திரசேகரன், மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியர் மணிகண்டன், பவானி அரசு மகளிர் மேல்நிலை பள்ளி ஆசிரியர் பாலகிருஷ்ணன், ஈரோடு ஈ.கே.எம் அப்துல் கனி மதரசா இஸ்லாமிய உயர்நிலை பள்ளி ஆசிரியர் சேட்டு மதார்ஸா, சிறுகளஞ்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியை கல்யாணி, காடகநல்லி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியை நம்பிக்கை மேரி, ஏழுர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி ஆசிரியை சுமதி, குருவரெட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி ஆசிரியர் ரஞ்சித்குமார், அவ்வையார்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை தீபலட்சுமி, பெருந்துறை கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலை பள்ளி ஆசிரியர் ரவிகுமார் ஆகிய 11 பேர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் புதுமையான கற்பித்தல், கல்விக்கான செயலிகள் வடிவமைத்தல், பள்ளிக்கூடங்களில் சுற்றுச்சூழல் மேம்படுத்துதல், மாணவர் சேர்க்கையை அதிகரித்தல் ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |