Categories
தேசிய செய்திகள்

தேசத் தலைவர் குடும்பத்தில் ஒரு இழப்பு… பிரதமர் மோடி இரங்கல்…!!!

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் சகோதரர் மகள் சித்ரா கோஷ் உயிரிழந்ததை யொட்டி பிரதமர் மோடி ட்விட் செய்துள்ளார்.

நம் நாட்டின் சுதந்திரத்திற்காக பல்வேறு தலைவர்கள் போராடியுள்ளனர்.அப்படிப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். நேதாஜி இப்போது நம்முடன் இல்லாமல் இருந்தாலும் அவரின் வீரமும், நற்செயலும் நம் மனதில் என்றும் நிலைத்திருக்கும். இந்நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சகோதரர் சரத் சந்திர போஸின் இளைய மகள் சித்ரா கோஷ் நேற்று இரவு உயிரிழந்தார்.

Netaji Subhas Chandra Bose's niece Chitra Ghosh passes away; PM Modi  extends condolences

 

இவருக்கு 90 வயதாகிறது. இதுகுறித்து சித்ரா கோஷிர்க்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தி ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பேராசிரியர் சித்ரா கோஷ் சமூக சேவை மற்றும் கல்வித் துறையில் தனது பணியை சிறப்பாக செய்துள்ளார். நான் அவரை நேரில் சந்தித்து இருந்தபோது சுபாஷ் சந்திர போஸ் பற்றி பல தலைப்புகளில் விவாதம் நடத்தியுள்ளோம். சித்ரா கோஷ் ஆன்மா சாந்தி அடையட்டும் என்று பதிவிட்டிருந்தார்.

Categories

Tech |