Categories
உலக செய்திகள்

இந்த “7 அறிகுறிகள்” உங்களுக்கு இருக்கா…? அப்ப அலட்சியமாய் இருக்காதீங்க..!!

புதிய வகை கொரோனா, உருமாற்றம் பெற்ற கொரோனா என்று பல தகவல்கள் நமக்கு பீதியை அளிக்கின்றது. இந்த உருமாற்றம் பெற்ற கொரோனாவின் அறிகுறிகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா நாடுகளில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு வைரஸ் காலப்போக்கில் அதன் வாழ்வியல் கூறுகளில் மாற்றம் பெற்று உரு மாற்றம் அடைவது இயல்பான ஒன்று என்று மருத்துவ உலகம் கூறுகிறது. கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இதுவரையில் 17 முறை தனது மரபியல் கூறுகளை மாற்றியுள்ளதாக அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் அறிகுறிகள் சிலவற்றை இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கிறது. ஏற்கனவே உள்ள அறிகுறிகளான வறட்டு இருமல், காய்ச்சல், வாசனை மற்றும் சுவை இழப்பு ஆகியவற்றுடன் சேர்த்து புதிதாக 7 அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை

  • சோர்வு
  • பசியின்மை
  • தலைவலி
  • வயிற்றுப்போக்கு
  • மன குழப்பம்
  • தசை வலிகள்
  • தோல் அரிப்பு

இதில்  எந்த அறிகுறிகளாவது உங்களுக்கு இருந்தால், அது கொரோனாவாக இருக்கலாம். அதனை அலட்சியப்படுத்த வேண்டாம். மேலும் விரைவில் ஒரு கொரோனா பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |